விருதுநகர் வாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் சிவராத்திரி நாட்டியாஞ்சலி
ADDED :2513 days ago
விருதுநகர்:விருதுநகரில் வாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் சிவபெருமானுக்கு சிவசகஸ்ர நாம ஜெப அர்ச்சனை புஷ்பாஞ்சலியுடன் விழா துவங்கியது. இன்னிசை நிகழ்ச்சிகள், அலங்கார தீபாரதனை, பட்டிமன்றம் நடந்தது. தொண்டர் தம் பெருமை எனும் தலைப்பில் பேராசிரியர் உமாதேவி ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தினார். இதில் நடன பள்ளி மாணவிகள் சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி ஆடினர். தொடர்ந்து பிரதோஷ வழிபாடு, ருத்ராபிஷேகம் நடந்தது.