பழநி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
பழநி: பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன.
பழநி கோதைமங்கலம் சண்முகநதிக்கரையில் உள்ள பெரியாவுடையார் கோயிலில் பிரதோஷ வேளையில், நந்திபகவான், மூலவருக்கும் அபிஷேகம், அலங்காரம் நடந்தது.
சிவன், பார்வதி ரிஷபவாகனத்தில் உட்பிரகாரத்தை வலம்வந்தனர். இடும்பன்கோயிலில் சிவகிரிநாதர், உமா மகேஸ்வரியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து சாமி புறப்பாடு நடந்தது.
மலைக்கோயில் கைலாசநாதர், சன்னதிவீதி வேளீஸ்வரர்கோயில், அ.கலையம்புத்தூர் கல்யாணிசமேத கைலாசநாதர்கோயில், நேதாஜிநகர் காமாட்சி அம்மன், ஏகாம்பரேஸ்வரர் கோயில், பெரியநாயகியம்மன் கோயில் கைலாசநாதர்,புதுநகர் சிவன்கோயில்களில் நடந்த அபிஷேகம், பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
* கன்னிவாடி: கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமி, நந்திக்கு பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால்
அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது.
* சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், வெல்லம்பட்டி மாரிமுத்துசுவாமி கோயில், காரமடை ராமலிங்கசுவாமிகள் மடத்தில் பிரதோஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.