கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகேயுள்ள வீரபத்திர சுவாமி கோவில் திருவிழா
ADDED :2516 days ago
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகேயுள்ள அம்மேரி வீரபத்திர சுவாமி கோவில் திருவிழா கடந்த, 2ல் துவங்கியது. வீரபத்திர சுவாமிக்கு கரகம் எடுத்து, சேவாட்டத் துடன் கோவிலை சுற்றி உலா வருதல் நிகழ்ச்சி நடந்தது. இரவு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று (மார்ச்., 3ல்) காலை, பக்தர்களின் தலை மீது பூசாரி தேங்காயை உடைத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். மேலும் காதணி விழாவும், முடி எடுத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. அம்மேரி, வரட்டனப்பள்ளி, கொண்டப்பநாயனப்பள்ளி, பி.ஆர்.ஜி., மாதேப்பள்ளியை சேர்ந்த தும்பே குல பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.