நவநிதீஸ்வரர் கோவிலில் பைரவர் சிலை பிரதிஷ்டை
ADDED :2708 days ago
ஏகனாம்பேட்டை: தசபுஜ விஸ்வரூப சம்ஹார பைரவர் சிலை நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. வாலாஜாபாத் அடுத்த, ஏகனாம்பேட்டை ஊராட்சியில், நவாசாகிப்பேட்டை நவநிதீஸ்வரர் கோவில் உள்ளது.
இங்கு, தசபுஜ விஸ்வரூப சம்ஹார பைரவருக்கு, தனி சிலை நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதற்கான பூஜைகள், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, யாக சாலை பூஜையுடன் துவங்கியது. அதை தொடர்ந்து, வேள்வியில் வைக்கப்பட்ட பைரவர் சிலை, காலை, 10:00 மணிக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. விழாவில், ஏகனாம்பேட்டை சுற்றியுள்ள பல கிராமவாசிகள் பங்கேற்று, பைரவரை வழிபட்டனர்.