திண்டிவனத்தில் வரும் 6ம் தேதி மயான கொள்ளை
ADDED :2444 days ago
திண்டிவனம்: திண்டிவனத்தில் வரும் 6ம் தேதி, மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடக்கிறது. திண்டிவனம் செஞ்சி ரோட்டிலுள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், வரும் 6ம் தேதி மயனாக்கொள்ளை ஊர்வலம் நடக்கிறது.
இதையொட்டி நாளை (5ம் தேதி) காலை அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத் திற்கு பிறகு கொடியேற்றம் நடக்கிறது.தொடர்ந்து 6ம் தேதி காலை 11.00 மணிக்கு, அங்காள பரமேஸ்வரி அம்மன், சிம்ம வாகனத்தில் மகிடாசூர சம்ஹாரத்துடன் ஆதிபராசக்தியாய் அமர்ந்து பூங்கப்பரை காளிவேஷத்துடன் ஊர்வலமாக மயானாக்கொள்ளைக்கு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.