தேனி மாவட்ட கோயில்களில் மகா சிவராத்திரி பூஜை
தேனி: தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதி சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தேனி வேதபுரீ தட்சிணாமூர்த்தி சேவா சமிதியில் நேற்றிவு மகா சிவராத்திரி வழிபாடு துவங்கியது. 9:00 மணிக்கு மகந்தியாஸ் ஜபத்துடன் ருத்ரஜப அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. அதிகாலை வரை சிறப்பு பூஜைகள் நடந்தன. 11 முறை ஸ்ரீருத்ரஜபமும், சிவபுராண பாராயணமும் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
பெரியகுளம்: தென்கரை ஞானாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் கோயிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. நான்கு கால பூஜைகள் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். பூஜை ஏற்பாடுகளை கணேச குருக்கள் செய்திருந்தார்.
* பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில், ராஜேந்திரசோழீஸ்வரர், அறம்வளர்த்த நாயகி, பாலசுப்பிரமணியருக்கு அபிஷேக ஆராதனை நடந்தது.
* கைலாசபட்டி கைலாசநாதர் கோயில், பெரியகுளம் வடகரை தையல்நாயகி உடனுறை வைத்தியநாதர் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.