காஞ்சிபுரம் கோயில்களில் மகா சிவராத்திரி விழா
ADDED :2444 days ago
காஞ்சிபுரம்: மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில் நேற்று, பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
காஞ்சிபுரத்தில் சிவ தலங்கள் ஏராளமாக உள்ளன. ஆண்டு தோறும் சிவராத்திரி விழாவை முன்னிட்டு, காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில், பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்படும். வழக்கமாக, அன்று மாலை, 6:00 மணியில் இருந்து மறுநாள் விடியற்காலை வரை, பக்தர்கள் காத்திருந்து, சுவாமியை தரிசனம் செய்வர். நேற்று காலையில் இருந்து, பக்தர்கள் தரிசனம் செய்ய துவங்கினர். பர்வதவர்த்தினி சமேத கைலாசநாதர், ராஜவீதிகளில் வீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏகாம்பரநாதர் கோவில், கச்சபேஸ்வரர் கோவிலில், ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும், சிறப்பு வழிபாடு நடைபெற்றது.