உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தாசலம் பழமையான சிவன் கோவிலை புனரமைக்க அனுமதி

விருத்தாசலம் பழமையான சிவன் கோவிலை புனரமைக்க அனுமதி

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த நல்லூர் வில்வவனேஸ்வரர் கோவிலை புனரமைக்க சென்னை ஐ கோர்ட் கமிட்டியிடம் அனுமதிக்காக பூர்வாங்க பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மேற்கொண்டுள்ளனர்.

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில், ஐந்து கோபுரம், ஐந்து லிங்கம், ஐந்து நந்தி, ஐந்து பிரகாரம், ஐந்து தேர், ஐந்து உற்சவம், ஐந்து கொடிமரம், ஐந்து கோவில்கள் என ஐந்தின் சிறப்புகளாக விளங்குகிறது.

நல்லூர் வில்வவனேஸ்வரர் கோவில் 12 மற்றும் 13ம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்க சோழன், மூன்றாம் ராஜராஜன், பல்லவர்கள் உள்ளிட்டோர் கட்டிய பழமையான கோவில். இத்தலத்தை புனரமைக்க, நிர்வாகத்தை கவனிக்கும் விருத்தாசலம், மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனுமதிகேட்டு, தொல்லி யல் துறைக்கு விண்ணப்பித்தது. இந்நிலையில், கடந்த 18.12.2018 ம் தேதி தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, அறிக்கை கொடுத்தனர்.

இதையடுத்து, சென்னை ஐ கோர்ட் கமிட்டி அனுமதிக்காக கருத்துருக்களை தயார் செய்யும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !