உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்

மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து, கரும்பில் தொட்டில் கட்டி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மஞ்சளாற்றின் கரையில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற இக்கோயிலில்மூடப்பட்ட கதவிற்கு பூஜை செய்யப்படுகிறது. ஆண்டு முழுவதும் அணையா நெய்விளக்கு எரிகிறது.இக்கோயில் மாசி மகாசிவராத்திரி திருவிழா மார்ச் 4 ல் துவங்கியது. தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களைசேர்ந்த பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர். திருவிழாவின் இரண்டாம் நாளானநேற்று காலையில் இருந்து பக்தர்கள் மஞ்சாற்றங்கரைக்கு சென்று அக்னி சட்டி எடுத்தும், கரும்பில் தொட்டில் கட்டி குழந்தைகளைவைத்து தங்களின் நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !