உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசிதேரோட்டம்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசிதேரோட்டம்

ராமேஸ்வரம்: மாசி சிவராத்திரியை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ரத வீதியில் மாசி தேரோட்டம் நடந்தது. மாசி சிவராத்திரி விழாவையொட்டி பிப்., 25ல் ராமேஸ்வரம் கோயிலில் கொடி ஏற்றப்பட்டு, தொடர்ந்து 13 நாட்கள் மாசி திருவிழா நடந்து வருகிறது. 9ம் நாள் விழாவான நேற்று (மார்ச். 5ல்) கோயிலில் இருந்து சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் புறப்பாடாகி அலங்கரித்த மாசி திருத்தேரில் எழுந்தருளினர்.

பின் கோயில் குருக்கள் மந்திரம் முழங்க சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி, தக்கார் குமரன் சேதுபதி, உதவி ஆணையர் குமரேசன் உள்ளிட்ட அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின் காலை 9:00 மணிக்கு பக்தர்கள் மாசி திருத்தேரை வடம் பிடித்தனர். கோயில் ரதவீதியில் மாசி தேர் வலம் வந்தது. இன்று (மார்ச். 6) மாசி அமாவாசையில் சுவாமி, அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்த வாரி கொடுக்கும் உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !