வீரக்குமாரசுவாமி தேர்த்திருவிழா வடம் பிடித்து பக்தர் பரவசம்
வெள்ளகோவில்: வெள்ளகோவில், வீரக்குமாரசுவாமி கோவிலில், 136ம் ஆண்டு மாசி மஹா சிவராத்திரியை முன்னிட்டு தேர்த்திருவிழா துவங்கியது.
வீரக்குமார சுவாமி கோவில் தேர்த்திருவிழா கடந்த வாரம், கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று காலை, வீரக்குமார சுவாமி, சிறப்பு அலங்காரத்தில், தேருக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நேற்றிரவு, 7:00 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. எம்.எல்.ஏ., தனியரசு, அறநிலையத்துறை உதவி பொறியாளர் பிரேம்குமார், டி.எஸ்.பி., செல்வம், இன்ஸ்பெக்டர் ஜெயபால், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் முத்துக்குமார் உட்பட பலர் துவக்கி வைத்தனர். தேர், ஏறத்தாழ, 200 அடி துாரம் சென்று நிறுத்தப்பட்டது. இன்றும், நாளையும் தேரோட்டம் நடக்கிறது. வில் குலத்தவர்கள், பக்தர்கள், பெண்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.