குளித்தலை சிவராத்திரியொட்டி சிவன்கோவில்களில் சிறப்பு பூஜை
குளித்தலை: குளித்தலை அடுத்த, மேட்டுமருதூர், ஆரா அமுதீஸ்வர் கோவிலில் நடந்த மஹா சிவராத்திரி விழாவில், நான்கு கால சிறப்பு பூஜை நடந்தது.
இதில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான கிராம பொதுமக்கள் சிவனடியார்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் குளித்தலை கடம்பர்கோவில் கடம்பவனேஸ்வரர், அய்யர்மலை ரெத்தினசிரீஸ்வரர், சிவாயம் சிவபுரீஸ்வரர், ஆர்.டி.மலை கோவில் உள்ளிட்ட பல ஈஸ்வரன் கோவில்களில், சுவாமிக்கு நான்கு கால சிறப்பு பூஜை நடந்தது.
இதேபோல், கோலமாயிரம் கண்ணுடையாள் சமேத வடசேரி கோலகொண்டேஸ்வரர் கோவிலில், 13ம் ஆண்டு மஹா சிவராத்திரி விழா நடந்தது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.
* கிருஷ்ணராயபுரம் திருக்கண்மல்லீஸ்வரர் கோவிலில், சிவராத்திரி முன்னிட்டு, சுவாமிக்கு பால், தயிர், இளநீர் போன்ற பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நான்கு கால பூஜை, மலர் அலங்காரம் சிறப்பு பூஜை நடந்தது. இதேபோல், பழைய ஜெயங்கொண்டம் ஆளவந்தீஸ்வரர் கோவில், சிம்மபுரீஸ்வரர் சிவன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நடந்த சிவராத்திரி சிறப்பு பூஜையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.