உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குளித்தலை அங்காளம்மன் கோவில் திருவிழா

குளித்தலை அங்காளம்மன் கோவில் திருவிழா

குளித்தலை: குளித்தலை அடுத்த மேட்டு மருதூர் அங்காள பரமேஸ்வரி கோவிலில், மஹா சிவராத்திரியொட்டி, நேற்று (மார்ச்., 5ல்)காலை, 1:00 மணிக்கு, மயானத்தில், கோவில் பூசாரி எரிகாவல் பூஜை செய்தார்.

பின்பு,அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி, முக்கிய வீதி வழியாக பூஜை வாங்கி, அதிகாலையில் கோவில் வந்தடைந்தது. இதில் கோவில் குடிப்பாட்டுக்காரர்கள் , பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர். நேற்றிரவு (மார்ச்., 5ல்) கோவிலில் இருந்து மேளதாளத்துடன், மாறுவேடத்தில் பூசாரியை அழைத்துகொண்டு ராணிமங்கம்மாள் சாலை அரிசி ஆலை அருகே, கோட்டை கட்டுதல் நடந்தது. பின்பு குதிரை வாகனத்தில் முக்கிய தெருக்களில் பூஜை வாங்கியது. இன்று (மார்ச்., 6ல்) காலை, மருதூர் காவிரி ஆற்றில் பால்குடம் எடுத்தல், தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !