ராமேஸ்வரம் கடலில் புனித நீராடிய பக்தர்கள்
ராமேஸ்வரம்: மாசி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். மாசிமகா சிவராத்திரி விழாவையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பிப்.,25ல் கொடி ஏற்றப்பட்டு திருவிழா துவங்கியது. தொடர்ந்து முக்கிய விழாவாக மார்ச் 4, 5ல் மாசி சிவராத்திரி, மாசி தேரோட்டம் நடந்தது.
பத்தாம் நாள் விழாவான நேற்று மாசி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள், கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர் ஆன்மா சாந்தியடைய வேண்டி திதி பூஜை செய்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினார்கள். இதனை தொடர்ந்து கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் பக்தர்கள் வரிசையில் நின்று நீராடினார்கள். பகல் 1:50 மணிக்கு கோயிலில் இருந்து சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பிரியாவிடை அம்மனுடன் தங்க ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளியதும் மகா தீபாராதனை, பக்தருக்கு தீர்த்த வாரி உற்சவம் நடந்தது.