புட்லுார் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயான கொள்ளை
ADDED :2451 days ago
புட்லுார்: புட்லுார் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று, மயானக் கொள்ளை நடந்தது.
திருவள்ளூர் அடுத்த, புட்லுார், ராமாபுரத்தில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, மகா சிவராத்திரியையொட்டி, ஆண்டுதோறும் மயானக் கொள்ளை நடந்து வருகிறது. இந்த ஆண்டு, மயானக் கொள்ளை உற்சவம் நேற்று மதியம் நடந்தது. முன்னதாக, இரு தினங்களுக்கு முன், மயானக்கொள்ளையில் கலந்து கொள்ளும் பக்தர்கள் காப்பு கட்டிக்கொண்டனர். மயான கொள்ளையை முன்னிட்டு, நேற்று மதியம், கோவில் குளம் அருகே மைதானத்தில், அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார். பின், விரதமிருந்த பக்தர்கள் தங்களது வேண்டுதலை, அப்பகுதியில் மயானத்தில் நிறைவேற்றினர். அதன் பின், அம்மன் வீதியுலா நடந்தது. மயான கொள்ளை உற்சவத்தில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.