தஞ்சையில் ராமராஜ்ஜிய ரதயாத்திரை
ADDED :2451 days ago
தஞ்சாவூர்: ராமராஜ்ஜியத்தை அமைக்கவும், ராமஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் உள்ளிட்ட, கோரிக்கைகளை முன் வைத்தும், ஸ்ரீ ராமதாச மிஷன் யுனிவர்சல் ஏற்பாட்டில், ராமராஜ்ய ரத யாத்திரை ராமேஸ்வரத்தில் இருந்து, அயோத்திக்கு கடந்த, 4ம் தேதி துவங்கியது.
ராமேஸ்வரத்திலிருந்து துவங்கிய ரதயாத்திரை, தஞ்சாவூர் பெரியகோவிலுக்கு நேற்று பிற்பகல் வந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ரதயாத்திரை ஏற்பாட்டாளர்கள் கூறியதாவது: ராம ராஜ்ஜியத்தை மீண்டும் அமைக்க வேண்டும். ராம ஜென்ம பூமியில், ராமர் கோவில் கட்ட வேண்டும், பள்ளிப் பாடத்தில் ராமாயணத்தை சேர்க்க வேண்டும் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முன்வைத்து ரதயாத்திரை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.