திருப்புவனம் பூமாரியம்மன் கோயிலில் அக்னிசட்டி ஏந்தி நேர்த்திக்கடன்
ADDED :2519 days ago
திருப்புவனம்:திருப்புவனம் ரேணுகாதேவி பூமாரியம்மன் கோயிலில் திருவிழா கடந்த மாதம் 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவில் நிறைவு நாளான நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் அம்மன் தரிசனம் செய்தனர்.
விரதமிருந்த பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், கரும்பு தொட்டில் துாக்கியும், பொம்மைகளை ஏந்தியும் வலம் வந்தனர். நிறைவு விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. நிறைவு நாளில் சுற்றுவட்டார கிராமமக்கள் பொங்கலிட்டு,மாவிளக்கு எடுத்து வழிபட்டனர்.பக்தர்களின் வசதிக்காக நேற்று மாலை 5:00 மணியிலிருந்து மதுரை--ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. மானாமதுரை டி.எஸ்.பி., கார்த்திகேயன் தலைமையில் திருப்புவனம் இன்ஸ்பெக்டர் சேது மற்றும் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.