திருப்பரங்குன்றத்தில் பாரி வேட்டை
ADDED :2479 days ago
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உபகோயிலான அங்காள பரமேஸ்வரி சமேத குருநாத சுவாமி கோயிலில் பாரி வேட்டை திருவிழா நடந்தது. நேற்றுமுன்தினம் இரவு குருநாதன் கோயிலில் எழுந்தருளியுள்ள பேச்சியம்மன், ராக்காயி அம்மன், பெரிய கருப்பண சுவாமி, சங்கிலி கருப்பண சுவாமி, அக்னி வீரபத்திர சுவாமி, இருளப்பா சுவாமி மற்றும் 21 பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.இரவு சுப்பிரமணிய சுவாமி கோயிலின் பூச்சப்பரத்தில் அம்மன் புறப்பாடாகி காட்டு பேச்சியம்மன் இருப்பிடம் சென்று பாரி வேட்டை நிகழ்ச்சி நடந்தது.