மழை வேண்டி மரங்களுக்கு திருமணம்
ADDED :2417 days ago
தலைவாசல்: மழை பொழிய வேண்டி, அரசு - வேம்பு மரங்களுக்கு, மக்கள் திருமணம் நடத்தி வைத்தனர். தலைவாசல், நாவக்குறிச்சி, வரகூர் பிரிவு சாலையில், வட கரையான் கோவில் உள்ளது. அங்குள்ள, அரச மரம் சிவனாக(ஆண்), வேப்ப மரம் சக்தியாக(பெண்) கருதப்படுகிறது. இரு மரங்களுக்கும் திருமணம் செய்ய, ஊர் பிரமுகர்கள் முடிவு செய்தனர். அதன்படி, முகூர்த்த நாளான நேற்று காலை, மங்கள வாத்தியம் முழங்க, மந்திரம் ஓதி, முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்து வைத்தனர். இதில், திராளானோர் பங்கேற்றனர். பக்தர்கள் கூறுகையில், பருவம் எய்திய அரசு, வேம்புக்கு திருமணம் செய்தால், சம்பந்தப்பட்ட பகுதியில் கிரக தோஷம், பல்வேறு தடைகளால் திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். மேலும், மழை பொழிந்து, கிராமத்தில் சுபிட்சம் ஏற்படும் என்றனர்.