தீர்த்தக்குட ஊர்வலம் பழனியாண்டவர் கோவில்
ADDED :2416 days ago
மகுடஞ்சாவடி: கொங்கணாபுரம் அருகே, கச்சுப்பள்ளி, கோணங்கியூரில், பெரியாண்டவர், பழனியாண்டவர் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. அதன் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று, திரளான பக்தர்கள், பூலாம்பட்டி காவிரியாற்றுக்கு சென்றனர். குடங்களில் தீர்த்தம் நிரப்பி, பூஜை செய்து, வாகனம் மூலம் எட்டிகொட்டைமேடுக்கு வந்தனர். அங்கிருந்து மேளதாளம் முழங்க, வாண வேடிக்கையுடன் ஊர்வலமாக கோவிலை அடைந்தனர். மாலை, 5:00 மணிக்கு, வாஸ்து ஹோமம், கணபதி ஹோமம், பூர்ணாஹூதி நடந்தது. இன்று காலை, 7:00 மணிக்கு மேல் கும்பாபிஷேகம் நடக்கிறது.