உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சமயபுரம் கோவிலில் பூச்சொரிதல் விழா

சமயபுரம் கோவிலில் பூச்சொரிதல் விழா

திருச்சி:திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலில், பூச்சொரிதல் விழா நடந்தது.திருச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில், பூச்சொரிதல் விழா நடந்தது.

முன்னதாக, நேற்று அதிகாலை, விக்னேஸ்வர பூஜை, சாந்தி, அங்குரார்ப்பணம் முடிந்து, காலை, 7:00க்கு மேல், 8:00 மணிக்குள், அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன், விழா துவங்கியது.தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட யானை மீது பூக்கூடையை வைத்தும், ஏராளமான பக்தர்கள் பூக்கூடைகளை சுமந்தும், ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் கொண்டு வந்த மலர்களால், மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடந்தது. விழாவையொட்டி, இன்று பகல், 12:00 மணி வரை, பக்தர்களுக்கு கட்டணமில்லா தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !