குறை தீர்ப்பான் குருவாயூரப்பன்
ADDED :2437 days ago
குருவாயூரப்பன் மீது நாராயண பட்டத்திரி பாடிய ’நாராயணீயம்’ ஸ்தோத்திரத்தில் உள்ள கீழ்க்கண்ட ஸ்லோகத்தை படித்தால் மனக்குறை, நோய் தீரும்.
ஸோயம் மர்த்யா வதாரஸ்தவ கலுநியதம்
மர்த்யஸிக்ஷார்த மேவம்
விஸ்லேஷார்திர் நிராகஸ்த்ய
ஜநமபி பவேத் காமதர்மாதி ஸக்த்யா!
நோசேத் ஸ்வாத்மாநுபூதே க்வநுதவ
மநஸோ விக்ரியா சக்ரபாணே
ஸத்வம் ஸத்வைகமூர்தே பவநபுரபதே
வ்யாது நுவ்யாதி தாபாந்!!
பொருள்: நல்லவர்களும் துன்பத்திற்கு ஆளாகிறார்கள் என்ற உண்மையை உணர்த்தவே பூமியில் மனித வடிவில் ராமனாக அவதரித்தீர்கள். கையில் சக்கரம் தாங்கி நிற்பவரே! நல்ல குணங்களின் இருப்பிடமாகத் திகழ்பவரே! குருவாயூரப்பனே! உமது அருளால் எனக்கு ஏற்பட்ட நோய், குறைகளைப் போக்குவீராக.