உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் கொடியேற்றம்

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் கொடியேற்றம்

திருவாலங்காடு: வடா­ரண்­யேஸ்­வ­ரர் கோவி­லில், பங்­குனி மாத பிரம்­மோற்­சவ விழா, கொடி­யேற்­றத்­து­டன், நேற்று நடந்­தது. வரும், 23ம் தேதி வரை பிரம்­மோற்­சவ விழா நடை­பெ­று­கிறது.

திரு­வா­லங்­காட்­டில் உள்ள வடா­ரண்­யேஸ்­வர சுவாமி கோவி­லின் நடப்­பாண்­டிற்­கான பங்­குனி மாத பிரம்­மோற்­சவ விழா,  நேற்று முன்­தி­னம், மூஷிக வாக­னத்­தில் விநா­ய­கர் வீதி­யு­லா­வு­டன் துவங்­கி­யது. நேற்று, காலை, 6:30 மணிக்கு பிரம்­மோற்­சவ விழா கொடி­யேற்­றம் நடந்­தது.

விழா­வில், முரு­கன் கோவில் தக்­கார் ஜெய­சங்­கர், இணை ஆணை­யர் சிவாஜி ஆகி­யோர் பங்­கேற்­ற­னர். வரும், 23ம் தேதி வரை, தின­மும், காலை மற்­றும் இரவு நேரத்­தில், ஒவ்­வொரு வாக­னத்­தில் உற்­ச­வர் சோமாஸ்­கந்­தர் சிறப்பு அலங்­கா­ரத்­தில் வீதி­யுலா வந்து பக்­தர்­க­ளுக்கு அருள்­பா­லிப்­பார். முக்­கிய நிகழ்ச்­சி­யான கம­லத் தேர் திரு­விழா, 17ம் தேதி­யும்,
திருக்­கல்­யா­ணம், 18ம் தேதி­யும் நடக்­கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !