ஒரு விரல் ரகசியம்
ADDED :2562 days ago
அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் ஞானசரஸ்வதி தனி சன்னதியில் இருக்கிறாள். அர்த்த (பாதி) பத்மாசனத்தில் காட்சி தரும் இவளின் வலதுகையின் ஆள்காட்டி விரல் மேல்நோக்கியபடி உள்ளது. இதற்கு ’சூசி’ முத்திரை என பெயர். கடவுளைப் பற்றி அறிவதே மேலானது’ என்பது இதன் பொருள். சாந்த முகத்துடன் மார்பில் பூணூல், கைகளில் ஜபமாலை, கமண்டலம், சுவடி, வளையல்கள் என கலைநயத்துடன் காட்சியளிக்கிறாள். இந்த சரஸ்வதியை வழிபட நல்லறிவு, ஞானம் உண்டாகும்.