சுவாமி மலையில் சுக்ல சஷ்டி காவடி திருவிழா
ADDED :2419 days ago
சென்னை: நங்கநல்லூர் சேவார்த்திகள் சங்கம் சார்பில் 28 வது ஆண்டு சுக்ல சஷ்டி காவடி திருவிழா, சுவாமி மலை அன்னபூர்ணா கல்யாண மண்டபத்தில சிறப்பாக நடைபெற்றது.
இதையொட்டி ஆதி சுவாமிநாத ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மேலும் மண்டபத்தில் சண்முக மூல மந்திரத்துடன் 10008 ஆவர்த்திகளுடன் சிறப்பு ஹோமம் நடைபெற்றது. சுவாமிநாத சுவாமிக்கு புஷ்ப அலங்காரத்துடன் தங்கரத உலா, காவடி சமர்ப்பனம், புஷ்ப கோலம் மற்றும் பஜனைகள் வெகு விமர்சையாக நடந்தேறியது. மேலும் சுவாமிமலை அரசு பள்ளியில் பயிலும் 500 மாணவ , மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேலும் முருகனுக்கு சண்முக அர்ச்சனையும், கிருத்திகையையொட்டி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை டிரஸ்டி பிரகாஷ் சிறப்பாக செய்திருந்தார்.