தீர்த்தனகிரி கோவிலில் மயான கொள்ளை விழா
ADDED :2434 days ago
புதுச்சத்திரம்: தீர்த்தனகிரி அங்காள பரமேஸ்வரி கோவிலில் 71வது ஆண்டு மயானக்கொள்ளை நடந்தது. புதுச்சத்திரம் அடுத்த தீர்த்தனகிரி அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயானக்கொள்ளை விழா கடந்த 6ம் தேதி காப்புக்கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினசரி பல்வேறுஅலங்கார வாகனங்களில் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முக்கிய நிகழ்வாக மயானக்கொள்ளை உற்சவம் நேற்று நடந்தது. காலை 10.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலை 5.45 மணிக்கு மயானக்கொள்ளை உற்சவம் நடந்தது. 14 ம் தேதி (இன்று) திருக்கல்யாணஉற்சவம், 15 ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்தனர்.