உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொன்னேரி மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

பொன்னேரி மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

பொன்னேரி:பொன்னேரி அருகே, மஹா மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடந்தது.

பொன்னேரி அடுத்த, பெரிய மனோபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த மஹா மாரியம்மன் கோவில் உள்ளது. கோவில் புனரமைப்பு பணிகள் முடிந்து, நேற்று (மார்ச்., 13ல்), கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

கணபதி ஹோமம், யாகம், கோ பூஜை, கலச பூஜைகள் என, காலை முதல், தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. காலை, 10:30 மணிக்கு கோபுர கலசங்களுக்கு, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

புனித நீர் கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டன.தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன. விழாவில், பொன்னேரி, மனோபுரம், சிவபுரம் உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்று அம்மனை வழிபட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !