மாதேஸ்வரன் கோவில் மண்டல பூஜை நிறைவு
ADDED :2423 days ago
அனுப்பர்பாளையம்: கணக்கம்பாளையம் ஸ்ரீ மாதேஸ்வரன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு நாளையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. திருப்பூரை அடுத்த கணக்கம்பாளையத்தில், பழமை வாய்ந்த ஸ்ரீ மாதேஸ்வரன் கோவில் உள்ளது.
கோவிலில், திருப்பணி நிறைவுற்று, கடந்த மாதம், கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின், 24 நாட்கள் மண்டலாபிஷேக பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தன. இந்நிலையில், நேற்று மண்டலாபிஷேக பூஜை நிறைவடைந்தது. இதையொட்டி, காலை கணபதி ேஹாமம், 108 சங்காபிஷேக பூஜை, மதியம் மஹா அபிஷேகத்தை தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.