உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன் மீது சூரிய ஒளி: பக்தர்கள் பரவசம்

சிவன் மீது சூரிய ஒளி: பக்தர்கள் பரவசம்

கிள்ளை: பின்னத்துார் சிவன்கோவிலில் சிவன்மீது சூரிய ஒளி விழுந்த போது அப்பகுதியினர் தீபம் ஏற்றி வழிபட்டனர். கிள்ளை அருகே பின்னத்துாரில் பர்வத வர்த்தினி சமேத ராமநாதேஸ்வரர்  கோவிலில் ஆண்டு தோறும் பிப்ரவரி 1ம் தேதியில் இருந்து 17ம் தேதி வரை மாலை 5.45 மணியில் இருந்து 6.10 மணிக்குள் கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு நடந்து வருகிறது. கடந்த 12ம் தேதி நடந்த இந்த நிகழ்வின்போது அப்பகுதினர் கற்பூர தீபம் மற்றும் அகல் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !