திருவள்ளூர் வீரராகவ பெருமாள் உற்சவர் புறப்பாடு
ADDED :2502 days ago
திருவள்ளூர்: திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், உற்சவர் எட்டு வீதி புறப்பாடு நேற்று நடந்தது. திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், திருக்கச்சி நம்பிகள் சாத்துமறையை முன்னிட்டு, நம்பிகள் திருமஞ்சனம், நேற்று காலை நடந்தது. தொடர்ந்து, உற்சவர் வீரராகவர் பெருமாளுக்கு, திருமஞ்சனம் மதியம் நடைபெற்றது. நம்பிகள் மற்றும் உற்சவர் வீரராகவ பெருமாள், எட்டு வீதிகளில் புறப்பாடு, நேற்று மாலை நடந்தது. வழி நெடுக பக்தர்கள் காத்திருந்து பெருமாளை வழிபட்டனர்.