முத்துப்பந்தல் வாகனத்தில் உலகளந்த பெருமாள் உலா
ADDED :2500 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவின் நான்காம் நாளான இன்று, பெருமாள் முத்துப்பந்தல் வாகனத்தில் வீதியுலா நடந்தது.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான இன்று காலை, ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் முத்துப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது . சுவாமி கோவிலை அடைந்தவுடன் வசந்த மண்டபத்தில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலை 5 : 00 மணிக்கு, சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் வசந்த மண்டபத்தில் ஊஞ்சல் சேவையில் அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 18ம் தேதி மாலை திருக்கல்யாணம், இரவு முத்துப்பல்லக்கில் சுவாமி வீதி உலா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில், கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.