மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்
ADDED :2503 days ago
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், மார்ச் 11ல், பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேர் திருவிழா, நேற்று நடைபெற்றது. நேற்று காலை, 6:00 மணிக்கு, கபாலீஸ்வரர் தேரில் எழுந்தருளினார். 7:00 மணிக்கு, தேர் வடம் பிடிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.