சோலைமலை முருகன் கோயில் உண்டியல் திறப்பு
ADDED :2554 days ago
அலங்காநல்லுார்: அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயில் உண்டியல்கள் எண்ணப்பட்டன. 15 கிராம் தங்கம், 268 கிராம் வெள்ளி, ரூ.11.67 லட்சம், வெளிநாட்டு டாலர் நோட்டுகள் இருந்தன. நிர்வாக அதிகாரி மாரிமுத்து, உதவி அதிகாரி அனிதா, தக்கார் பிரதிநிதி நல்லதம்பி உள்ளிட்டோர் உடனிருந்தனர். எண்ணும் பணியில் ஐயப்பா சேவா சங்கத்தினர் ஈடுபட்டனர்.