சத் சங்கத்தில் ஜோதி தரிசனம்
ADDED :2429 days ago
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் சத் சங்கத்தில் பங்குனி மாத பூசத்தையொட்டி திரை நீக்கி ஜோதி தரிசனம் நடந்தது.அதனையொட்டி, நேற்று காலை 10:00 மணிக்கு அகவல் பாராயணம் நடந்தது. இதில் ஏராளமான ஓதுவார்கள் திருஅருட்பா பாடல்களைப் படினர். தொடர்ந்து அருட்பிரகாச வள்ளலார் திரு உருவப்படத்தின் முன்பு திரைநீக்கி ஜோதி தரிசனம் நடந்தது.பின்னர் அற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்ச்சியாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் அருட்பிரகாச வள்ளலார் சுவாமிகளை வழிபட்டனர்.