உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடபழனி ஆண்டவர் கோவிலில் லட்சார்ச்சனை

வடபழனி ஆண்டவர் கோவிலில் லட்சார்ச்சனை

சென்னை: வடபழனி ஆண்டவர் கோவிலில், பங்குனி மாதத்தை முன்னிட்டு, இன்று லட்சார்ச்சனை துவங்குகிறது. வடபழனி ஆண்டவர் கோவிலில், பங்குனி மாதத்தை முன்னிட்டு, லட்சார்ச்சனை, தெப்பத் திருவிழா விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு பங்குனி மாதத்தை முன்னிட்டு, இன்று லட்சார்ச்சனை துவங்கி, 20ம் தேதி வரை நடக்கிறது.

21ம் தேதி இரவு, 7:00 மணிக்கு, சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி புறப்பாடு நடக்கிறது.வரும், 22ம் தேதி முதல், 24ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு, தினமும் இரவு, 7:00 மணிக்கு, திருக்குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில், சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். முதல் நாள் தெப்பத்தில், வடபழனி ஆண்டவர் புறப்பாடும், இரண்டாம் நாள் தெப்பத்தில், சண்முகர் வள்ளி, தெய்வானை புறப்பாடும், மூன்றாம் நாள் தெப்பத்தில், சுப்ரமணியர் வள்ளி, தெய்வானை புறப்பாடும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !