உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூணாறு பார்வதியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மூணாறு பார்வதியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மூணாறு: மூணாறு அருகே கே.டி.எச்.பி., கம்பெனிக்குச் சொந்தமான பெரியவாரை எஸ்டேட், லோயர் டிவிஷனில் தொழிலாளர்கள் சார்பில் புதிதாக பார்வதி அம்மன் கோயில் கட்டப் பட்டது.

அதன் கும்பாபிஷேகம் நேற்று (மார்ச்., 17ல்) நடந்தது. முன்னதாக கும்ப பூஜை, ருத்ர ஜெபம் மற்றும் கணபதி, துர்கா, லெட்சுமி ஆகிய ஹோமங்கள் சிறப்பு பூஜைகள் நடந்தன.

நல்லதண்ணி எஸ்டேட் மேலாளர் பிரமோத் கிருஷ்ணா, டெபுடி மேலாளர்கள் மணீஷ்சிங், நவ்தீப்தகியா, மூணாறு டி.எஸ்.பி. சுனீஷ்பாபு, மூணாறு இந்து தேவஸ்தானம் தலைவர் பாபுலால், துணைத் தலைவர் கணேசன், அனைத்து பழநி பாதயாத்திரை குழு ஒருங்கிணைப்பாளர் சண்முகநாதன், ஊராட்சி உறுப்பினர்கள் பழனி சாமி, ஸ்டாலின் உள்பட பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். அன்னதானமும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !