உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வளவனூர் பிரம்மகுமாரிகள் ராஜயோக தியான நிலைய ஆண்டு விழா

வளவனூர் பிரம்மகுமாரிகள் ராஜயோக தியான நிலைய ஆண்டு விழா

விழுப்புரம்: வளவனூர் பிரம்மகுமாரிகள் ராஜயோக தியான நிலைய ஆண்டு விழா நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சித்தர் கோவில் சிவாச்சாரியார் முருகன் ஆன்மிக உரை நிகழ்த்தினார்.

சிவனின் மகிமைகள் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடத்தப்பட்டது. மைய நிர்வாகி பிரம்மகுமாரர் செல்வமுத்துக் குமரனின் 30 ஆண்டுகால ஆன்மிக சேவையை பாராட்டி கவுரவிக்கப்பட்டார்.இம்மையம் மூலம் காலை, மாலை என இரு வேளைகளில் இலவசமாக நடத்தப்படும்

ராஜயோக தியானப்பயிற்சி மூலம் மன அழுத்தம் குறைவது. நேர்மையான எண்ணம் அமைவது. தன்னம்பிக்கை கூடுவது. ஆயுட்காலம் நீடிப்பது உள்ளிட்ட நன்மைகள் ஏற்படுவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !