கண்ணமங்கலம் காசி விஸ்வநாதர் கோவில் புதிய ரதம் வலம்
ADDED :2492 days ago
கண்ணமங்கலம்: திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த, கொளத்தூரில், காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பர ஈஸ்வரர், காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் (இரட்டை சிவாலயம்), கோவிலில், உபயதாரர்களால் செய்யப்பட்ட புதிய ரதம் வலம் வருதல், உற்சவர் கும்பாபிஷேகம் நேற்று (மார்ச்., 17ல்)நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், ரதத்தை வடம் பிடித்து இழுத்துச் சென்று வழிபட்டனர்.