தலைவாசல் அருகே, ஐயனாரப்பன் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :2494 days ago
தலைவாசல்: தலைவாசல் அருகே, கோவில் அலங்கார வளைவு கும்பாபிஷேகம் நடந்தது. தலைவாசல், தேவியாக்குறிச்சி ஊராட்சியில் இருந்து, வீரகனூர் நெடுஞ்சாலை செல்லும் வழியில், ஐயனாரப்பன் கோவில் அமைந்துள்ளது. சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், தலைவாசல் துணை மின் நிலையம் அருகில், கோவிலுக்கான அலங்கார வளைவு அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. நேற்று 18ல், காலை, அலங்கார வளைவில் உள்ள கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
தேவியாக்குறிச்சி, தலைவாசல் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.