சேலம், தாம்பிராஸ் முதியோர் இல்லத்தில் ராதா கல்யாண உத்ஸவம்
ADDED :2433 days ago
சேலம்: சேலம், தாம்பிராஸ் முதியோர் இல்லத்தில், நேற்று (மார்ச்., 17ல்) ராதா கல்யாண உத்ஸவம் நடந்தது.
சேலம், சின்னதிருப்பதியில் உள்ள தாம்பிராஸ் முதியோர் இல்ல வளாகத்தில், நேற்று முன்தினம் (மார்ச்., 16ல்) காலை விக்னேஸ்வர பூஜையுடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து, தோடய மங்களம், குரு தியானம், குரு அபங்கம், அஸ்டபதி பஜனை, தீபாராதனை நடந்தது. நேற்று (மார்ச்., 17ல்) காலை சம்பிரதாய ஊஞ்சவிருத்தி பஜனையை தொடர்ந்து, ராதா கல்யாண உத்ஸவம் நடந்தது. அதில், மாங்கல்யதாரணம், ஆஞ்சநேயர் உத்ஸவம் உள்ளிட்டவை இடம் பெற்றது.
ஓசூர் கிருஷ்ணமூர்த்தி பாகவதர் தலைமையிலான பாகவத கோஷ்டியினர் நிகழ்ச்சியை நடத்தினர். ஏற்பாடுகளை, மானேஜிங் டிரஸ்டி ஸ்ரீராமன், செயலாளர் சுகவனம், பொருளாளர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.