பரங்கிப்பேட்டை குட்டியாண்டவர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
ADDED :2501 days ago
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை ஆரியநாட்டு சலங்குகாரத் தெருவில் உள்ள குட்டியாண்டவர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்நடந்தது.கடந்த 15ம் தேதி கணபதி ஹேமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, பூர்வாங்க பூஜையும், 16ம் தேதி முதல்கால பூஜை நடந்தது. நேற்று 17ம் தேதி இரண்டாம் மற்றும் மூன்றாம் கால பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, கடம் புறப்பட்டு காலை 10;00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பரங்கிப்பேட்டையை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.