மாடம்பாக்கம் கோவிலில் உழவாரப் பணி
ADDED :2429 days ago
தாம்பரம்: மாடம்பாக்கம், தேனுபுரீஸ்வரர் கோவிலில், தனியார் ஆன்மிக குழுவின் சார்பில் உழவாரப் பணி நடந்தது.தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில், பழமை வாய்ந்த தேனுபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தொல்லியல் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில், உலக பண்பாட்டு நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் நேற்று, திருமுல்லைவாயிலைச் சேர்ந்த, ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் உழவாரப் பணி குழுவினர் சார்பில், கோவில் குளத்தின் சுற்றுப்புற பகுதிகள் மற்றும் நந்தவனம் ஆகியவை சீரமைக்கும் பணிகள் நடந்தன. மேலும், பூஜை பொருட்கள் மற்றும் திருவாச்சி சுத்தம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.