மணக்குள விநாயகர் கோவிலில் சங்காபிசேக விழா
ADDED :2429 days ago
புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோவிலில் 1008 சங்காபிஷேக விழா, வரும் 20ம் தேதி துவங்குகிறது. புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில், கும்பாபிஷேக விழாவின் 4ம் ஆண்டையொட்டி, சகஸ்கர சங்காபிஷேக விழா வரும் 21ம் தேதி நடக்கிறது.
இதையொட்டி, வரும் 20ம் தேதி மாலை 6.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, யாகசாலை, முதல்கால யாக பூஜை நடக்கிறது.வரும் 21ம் தேதி காலை 7.30 மணிக்கு 2ம் கால யாகசாலை பூஜை, மகா பூர்ணாஹூதி, தீபாராதனை, 11.௦௦ மணிக்கு யாத்ரா தானம், கலச புறப்பாடு நடக்கிறது.அதனைத்தொடர்ந்து மணக்குள விநாயகருக்கு 1008 சங்காபிஷேகம், உற்சவ மூர்த்திக்கு 108 சங்காபிஷேகம் நடக்கிறது. இரவு 7.௦௦ மணிக்கு உற்சவ மூர்த்தி வீதியுலா நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி அதிகாரி வெங்கடேசன் மற்றும் கோவில் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.