காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் பால்குட ஊர்வலம்
ADDED :2430 days ago
காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் மாசி பங்குனி திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று நரிக்குறவர் இன மக்கள் முத்துமாரியம்மனுக்கு வேண்டுதலை நிறைவேற்ற காப்பு கட்டி விரதம் இருந்து முத்தாலம்மன் கோயிலில் இருந்து அம்மனை வழிபட்டு தங்களது உடலில் அலகு குத்தி, பறவை காவடி, பால்குடம் மற்றும் அக்னிசட்டி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஆடி பாடி சென்று நேர்த்தி கடன் செலுத்தினர் . ஏராளமானோர் கலந்து கொண்டனர்.