உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை செல்லும் வாகனங்கள் நிலக்கல்லில் தடுத்து நிறுத்தம்

சபரிமலை செல்லும் வாகனங்கள் நிலக்கல்லில் தடுத்து நிறுத்தம்

 கூடலுார்: சபரிமலையில், சீசன் முடிவடைந்த நிலையிலும், வாகனங்களை பம்பை வரை அனுமதிக்காமல், நிலக்கல்லில் தடுத்து நிறுத்துவதால் பக்தர்கள் பரிதவிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை மண்டல பூஜை, மகரஜோதி சீசன், கார்த்திகை துவங்கி தை மாதம் வரை இருக்கும்.


இந்த நேரத்தில், கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், பம்பைக்கு, 23 கி.மீ.,க்கு முன்பே உள்ள நிலக்கல்லில் வாகனங்கள் நிறுத்தப்படும்.சீசன் நேரம் தவிர, மற்ற அனைத்து தமிழ் மாதங்களில், 5 ம் தேதி வரை சபரிமலை நடை திறக்கப்பட்டிருக்கும். இந்த நேரத்தில், குறைந்த எண்ணிக்கையிலேயே பக்தர்கள் வருவர். அப்போது, பம்பை வரை வாகனங்கள் அனுமதிக்கப்படும். தற்போது பங்குனி மாத விழாவிற்காக, நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், வாகனங்களை நிலக்கல்லிலேயே, போலீசார் தடுத்து நிறுத்துகின்றனர். அங்கிருந்து, கேரள அரசு பஸ்சில் பம்பைக்கு செல்ல வேண்டியுள்ளது. கூட்ட நெரிசல் இல்லாத நிலையில், வாகனங்களை பம்பை வரை அனுமதிக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !