மூணாறில் செல்வ விநாயகர் ராஜகாளியம்மன் கோயில் திருவிழா
ADDED :2432 days ago
மூணாறு: மூணாறு அருகே கே.டி. எச்.பி., கம்பெனிக்குச் சொந்தமான கன்னிமலை எஸ்டேட், லோயர் டிவிஷனில் செல்வ விநாயகர் ராஜகாளியம்மன் கோயில் திருவிழா கடந்த இரண்டு நாட்கள் நடந்தது. மூணாறு ஊராட்சி தலைவர் கருப்பசாமி துவக்கி வைத்தார். பல்வேறு சிறப்பு
பூஜைகளும், தீபாராதனையும் நடந்தது. பால்குடம், அக்னிசட்டி எடுத்து, அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.