கல்வி தரும் ஹயக்ரீவர்
ADDED :4975 days ago
மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க அருள்பவர் ஹயக்ரீவ மூர்த்தி. இவரை வழிபட்டால் கிரகிப்புத்திறனும், ஞாபகசக்தியும் அதிகரிக்கும். சரஸ்வதிதேவிக்கு வித்தைகளை உபதேசித்தவர் இவர். வேதங்களை திருடிச் சென்ற மதுகைடபர்களை அழித்து, பிரம்மாவிடம் அவற்றை ஒப்படைத்தவர். திருமால் தான் எடுத்த தசாவதாரங்களுக்கு முன்பே ஹயக்ரீவ அவதாரம் எடுத்ததாகச் சொல்வர். குதிரைமுகம் கொண்ட இவர் யோகநிலையில் தனித்தும், லட்சுமிதேவியோடு சேர்ந்தும் அருள்புரிகிறார். திருவோண நட்சத்திரத்தன்றும், புதன்கிழமையிலும் ஏலக்காய் மாலை சாத்தி வழிபடுவது பலன் தரும்.