உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூர் கந்த சுவாமி கோவிலில் 4ம் தேதி தேர் திருவிழா

திருப்போரூர் கந்த சுவாமி கோவிலில் 4ம் தேதி தேர் திருவிழா

திருப்போரூர் :திருப்போரூர் கந்த சுவாமி கோவிலில், வரும் 4ம் தேதி தேர் திருவிழா நடைபெற உள்ளது. அன்று காலை 8 மணிக்கு, கந்தபெருமான் அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதியுலா வருவார். மதியம் 2 மணிக்கு தேர் நிலையை வந்தடையும். மாலை 6 மணிக்கு தவன உற்சவம் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பாலகிருஷ்ணன், பரம்பரை ஆதீனம் சிவஞான சுவாமிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !