காரமடை அருகேவுள்ள குருந்த மலையில் கொடியேற்றம்
ADDED :2434 days ago
மேட்டுப்பாளையம் : காரமடை அருகேவுள்ள குருந்தமலை குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில், இன்று (மார்ச்., 19ல்) கொடியேற்றத்துடன், பங்குனி உத்திர தேர்த்திருவிழா துவங்குகிறது. இன்று காலை, 11:00 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை (மார்ச்., 20ல்) காலை, 10:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், மாலை, 5:00 மணிக்கு தேரோட்டமும் நடைபெறுகின்றன.
அன்று இரவு பரிவேட்டையும், தெப்ப உற்சவமும், சந்தன காப்பு அலங்காரமும், உற்சவம் பூர்த்தியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பெரியமருது பாண்டியன் செய்து வருகிறார்.