உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னுர் வட்டமலை ஆண்டவர் கோவில் பங்குனி உத்திர தேரோட்டம்

அன்னுர் வட்டமலை ஆண்டவர் கோவில் பங்குனி உத்திர தேரோட்டம்

அன்னுர் : குமாரபாளையத்தில் பழமையான வட்டமலை ஆண்டவர் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் வற்றாத சுனை உள்ளது. இங்கு பங்குனி உத்திர தேர்த்திருவிழா 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று (மார்ச்., 18ல்) காலையில், யாகசாலை பூஜையும், சுவாமி உட்பிரகார உலாவும் நடந்தது. (மார்ச்,19) ம் தேதி யாகசாலை பூஜை நடக்கிறது.

20ம் தேதி மாலையில் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 21ம் தேதி காலை 10:00 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது.சிரவை ஆதீனம் குமரகுருபர சாமிகள், பேரூர் ஆதீனம் மருதாசல அடிகள் அருளுரை வழங்குகின்றனர். ஜமாப் இசை, செண்டை மேளம், வள்ளி கும்மி ஆட்டம் நடக்கிறது. 22ம் தேதி இரவு பரிவேட்டை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !